பழனி சத்யா நகர் இரண்டாவது ரோடு பகுதியில் சுப்பிரமணி மகன் வெங்கடாசலம் (35) வயது மதிக்கத்தக்க இளைஞர் வித்யா என்ற மணைவியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் ஏற்கனவே திருமணமாகி கணவர் உயிரிழந்த நிலையில் தனது மகளுடன் வாழ்ந்து வந்த நித்யா என்பவரை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் நித்யாவின் 14 வயது மதிக்கத்தக்க குழந்தை வீட்டில் தனியாக இருந்துள்ளார் வீட்டில் யாரும் இல்லாத சந்தர்ப்பத்தை வெங்கடாசலம் தவறாக பயன்படுத்தி கற்பழீத்துள்ளார்.இதனால் மனதளவில் பாதித்தசிறுமி பயம் கலந்த படபடப்புடன் காணப்பட்டுள்ளார் இதில் சந்தேகம் அடைந்த குழந்தையின் தாய் நித்தியா எதற்காக படபடப்புடன் இருக்கிறாய் உண்மையைச் சொல் என்று அதட்டிக் கேட்கவே பயந்து போன 14 வயது சிறுமி தந்தை வெங்கடாசலம் தன்னை மிரட்டி கற்பழித்ததை கூறவே அதிர்ச்சியடைந்த தாய் நித்யா உடனடியாக தனது மகளுடன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வெங்கடாச்சலம் மீது புகார் கூறியுள்ளார்.
வெங்கடாசலத்தை காவல்துறை உடனடியாக கைது செய்து அவர் மீது போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தனது சொந்த மகளையே கற்பழித்த செய்தி அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சமூக ஆர்வலர்கள் பழனி பகுதியில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகின்றது. இச்சம்பவம் வெங்கடாச்சலம் கைது பழனியல் இது நான்காவது போஸ்கோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நபர் ஆகும்.
எனவே இதுபோன்ற மகளையே கற்பழீக்கும் கயவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் இனியும் இப்படி ஒரு சம்பவம் நடக்காதவாறு காவல்துறை பெண்களுக்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்
.
Repoter
Palanisuresh