வாக்குச் சீட்டில் உதயசூரியன் மிஸ்ஸிங்.. ஆவேசமடைந்த திமுகவினர்!
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட வாக்குச்சாவடியில் ஒட்டப்பட்டிருந்த மாதிரி படிவத்தில் திமுகவின் சின்னம் இல்லாததால் அக்கட்சியினர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியத்தில், மாவட்ட உறுப்பினராக திமுகவின் கூட்டணி கட்சியான இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஸ்டெல்லா என்பவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார். இந்நிலையில் வாக்குசாவடி மையத்தில் ஒட்டப்பட்டிருந்தது வேட்பாளர்களின் மாதிரி படிவத்தில் வேட்பாளர் ஸ்டெல்லாவின் பெயருக்கு நேராக உதயசூரியன் சின்னம் விடுபட்டிருந்தது. இதனை கண்டு கோபமடைந்த வேட்பாளர்களின் முகவர்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, போராட்டத்தில் ஈடுபட்டனர்.