பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலின் சார்பாக கடந்த 2004ஆம் ஆண்டு முதல் பக்தர்களின் விரைவான சேவைக்காக ரோப்கார் வசதி அன்றைய முதல்வர் ஜெயலலிதாஅவர்களால் ஏற்படுத்தப்பட்டது. இந்த ரோப்காரில் கோவிலுக்கு பயணம் செய்ய மூன்று நிமிடங்கள் மட்டுமே ஆகும். இப்படி உள்ள நிலையில் கடந்த 10 ஆண்டுகள் சேவையில் ஒருநாள் ரோப்கார் வருமானமாக குறைந்தபட்சம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் வரை மட்டுமே வசூல் ஆகியுள்ளது. இந்நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு திருக்கோயிலின் புதிய செயல் அலுவலராக ஜெயச்சந்திர பானு ரெட்டி மற்றும் உதவி ஆணையர் செந்தில்குமார் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர் செயல் அலுவலர் ரோப்காரில் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லட்சத்தி 50 ஆயிரத்தை விட அதிகமாக என்னுடைய பணி காலகட்டத்தில் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று ஊழியர்களிடம் கூற. அதனடிப்படையில் ரோப் காரின் புதிய கண்காணிப்பாளராக திருக்கோயில் மக்கள் தொடர்பு அதிகாரி கருப்பண்ணனை நியமித்துள்ளார். மேலும் ரோப் காரில் எந்த ஒரு நபருக்கும் முன்னுரிமை சீட்டு வழங்கப்படாது என்று திருக்கோயில் சார்பாக சமீபத்தில் தெரிவித்துள்ளனர். இதனடிப்படையில் ரோப் காரில் வருமானத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கில் திருக் கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி, உதவி ஆணையர் செந்தில்குமார், செயற்பொறியாளர் நாச்சிமுத்து, உதவி பொறியாளர் குமார், மற்றும் பார்த்திபன், ஆகியோர் அறிவுறுத்தலின் பேரில் 20/12/19 அன்று ஒரு நாள் மட்டும் வருமானம் 1 லட்சத்தி 89 ஆயிரத்து 415 ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த வசூல் சாதனையாகும்என்றார்கள்.இந்த சாதனையை நிகழ்த்துவதற்கு முழுமுதற் காரணமாக விளங்கிய திருக்கோவில் கண்கானிப்பாளர்,மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரி மற்றும் ரோப்கார் ஆப்ரேட்டர்கள்,ரோப்கார் ஊழியர்கள் மற்றும் திருக்கோயில் பாதுகாவலர்கள் இவர்களின் விடா முயற்சியாலேயே இந்த சாதனை நிகழ்த்தப்பட்டது என்று திருக்கோவிலின்சகஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.மேலும் இந்த சாதனை பற்றி சமூக ஆர்வலர்களிடம் கேட்டபொழுது நேர்மையான அதிகாரிகளால் மட்டுமே இந்த சாதனை நிகழ்த்த முடியும் பத்தாண்டுகளில் இதுபோல் வருமானம் இல்லையென்றால் எப்படி இந்த சாதனை சாத்தியமாகும் என்றால் திருக்கோயிலில் நேர்மையான அதிகாரிகள் இருந்தால் பழனிகோவில் வருமானம் மலைபோல் இருக்கும் என்றனார் இந்த சாதனைக்கு வித்திட்ட திருக்கோயில் செயல் அலுவலர் ஜெயச்சந்திர பானு ரெட்டி,
உதவி ஆணையர் செந்தில்குமார், மக்கள் தொடர்பு அதிகாரி கருப்பண்ணன், உள்ளிட்டோருக்கு பக்தர்கள் தங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தனர் மேலும் புதியதாக பெறுப்பேற்று இருக்கும் திருக் கோயில் செயல் அலுவலரின் நேரடி கண்காணிப்பில் பழனிகோவில் நிர்வாகம் மிக சிறப்புடன் செயல்பட்டு வருவது பாராட்டுக்குறியது
நிருபர்பழநிசுரேஷ்