தூத்துக்குடியில் வாலிபரிடம் செல்போன் பறித்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ராஜீவ் நகர் 7வது தெருவை சேர்ந்த லிங்கராஜ் (20). நேற்றிரவு அன்னை தெரசா நகர் ரோட்டில் நண்பர்களுடன் நின்று கொண்டிருந்தார்களாம். அப்போது 2 மோட்டார்பைக்கில் வந்த 4 பேர் லிங்கராஜை கத்தியை காட்டி மிரட்டி அவரிடமிருந்த சுமார் ரூ.21 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை பறித்து கொண்டு மாயமானார்கள். இது குறித்த புகாரின் பேரில் சிப்காட் இன்ஸ்பெக்டர் முத்து சுப்பிரமணியன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டதில் தூத்துக்குடி மேல அரசரடி கிராமத்தை சேர்ந்த சரவணகுமார் மகன் கரண்குமார் (20), கோரம்பள்ளம் நாச்சியார்புரத்தை சேர்ந்த பொன்கருப்பசாமி மகன் மாரி செல்வம் (17) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அண்ணாநகரை சேர்ந்த ஆத்திமுத்து மகன் முத்துக்கனி (30), ராஜகோபால் நகரை சேர்ந்த முருகன் மகன் மாரிசெல்வம் (17) ஆகியோரை தேடி வருகின்றனர்.