தூத்துக்குடி அருகே ஆடுகள் திருடியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி தெற்கு வீரபாண்டியபுரத்தை சேர்ந்த கணேசன் என்பவரது மகன் பாலமுருகன் (22). இவர் சொந்தமாக ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று மாலை ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்த போது ஒரு பைக்கில் வந்த 3 பேர் திடீரென 2 ஆடுகளை பிடித்து பைக்கில் ஏற்றி கொண்டிருந்தார்களாம். இதை பார்த்த பாலமுருகன் கூச்சலிடவே அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் 3 பேரையும் மடக்கி பிடித்து சிப்காட் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
எஸ்ஐ., கந்தசாமி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில் அவர்கள் அண்ணாநகரை சேர்ந்த சண்முகசாமி மகன் நாராயணன் (32) சுகுமார் மகன் செந்தில் (36), சோட்டையன்தோப்பை சேர்ந்த ராஜா (32) என தெரிய வந்தது. தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.