போலீஸ் வாகனத்தில் டிக்டாக் வீடியோ: 3பேருக்கு நூதன தண்டனை - டிஎஸ்பி அதிரடி!!
தூத்துக்குடியில் போலீஸ் வாகனத்தில் ஏறி நின்று டிக்டாக் வீடியோ வெளியிட்ட 3பேருக்கு காவல்துறையினர் நூதன தண்டனை வழங்கினர்.
தூத்துக்குடியில் ஒர்க்ஷாப்பில் வேலைக்காக நின்றுகொண்டிருந்த போலீஸ் வாகனத்தின் முன் டிக்டாக் செய்தவர்கள் மூன்று பேரை தென்பாகம் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் லெவிஞ்சிபுரம் 2ஆவது தெருவைச் சேர்ந்த ராமர் மகன் சீனு (17), ஆனந்தன் மகன் கோகுலகிருஷ்ணன் (17), முனியசாமிபுரம் பலவேசம் மகன் செகுரா (21) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் செய்த தவறை உணர்ந்து, இனிமேல் இதுபோன்ற எந்த தவறும் செய்ய மாட்டோம் என மன்னிப்பு கேட்டுள்ளனர்.
காவல் துறையின் பணி எவ்வளவு சிரமமானது என்பது தெரியவேண்டும் என்பதற்க்காக அவர்கள் 3 பேரையும் பெரிய மார்க்கட் சிக்னலில் 8மணி நேரம் போக்குவரத்து சரி செய்யும் பணிசெய்து காவல்துறையை பெருமைப் படுத்தவேண்டும் என தூத்துக்குடி டிஎஸ்பி பிரகாஷ் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்கள் இன்று ஒருநாள் காலை முதல் மாலை வரை தூத்துக்குடி காய்கறி மார்க்கெட் முன்பு போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு காவல்துறை சார்பில் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்ப்டுள்ளது.