தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பதுக்கியதாக 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 895 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சட்டவிரோதமாக மது பதுக்குதல், கடத்துதல், அதிகவிலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையால் எச்சரிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று புதுக்கோட்டை எஸ்ஐ., முத்துராஜ் நடத்திய சோதனையில் புதுக்கோட்டை சுற்று வட்டாரத்தில் மது விற்று கொண்டிருந்த கூட்டாம்புளியை சேர்ந்த மகாராஜா, திருமணி, பெவின் மற்றும் குலையன்கரிசலை சேர்ந்த சக்திவேல், சரவணவேல், அய்யனார் காலனியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 895 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.