வேளாண் மண்டலமாக்கும்சட்டத்தை நிறைவேற்றிய முதல்வருக்கு பாராட்டு விழா. 10 லட்சம் விவசாயிகள் பங்கேற்கின்றனர்

 



 


சென்னை : முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும் பாராட்டு விழாவிற்கு, 10 லட்சம் விவசாயிகளை திரட்ட, அமைச்சர்கள் திட்டமிட்டு உள்ளனர்.


காவிரி டெல்டா மாவட்டங்களை, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக்கும் அறிவிப்பை, சேலத்தில் நடந்த விழாவில், முதல்வர் எடப்பாடி பழனிசாமிஅறிவித்தார். அடுத்த, 10 நாட்களில், இதற்கான சட்டத்தையும், அரசு நிறைவேற்றியது.


இதனால், ஹைட்ரோகார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களை, அங்கு செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இது, விவசாயிகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.


இந்நிலையில், காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில், மார்ச், 7ல், திருவாரூரில் முதல்வருக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கு, 10 லட்சம் விவசாயிகளை திரட்ட திட்டமிடப்பட்டு உள்ளது.


இதற்கான பணிகளில், டெல்டா மாவட்டங்களை சேர்ந்த, அமைச்சர்கள் துரைகண்ணு, காமராஜ், ஓ.எஸ்.மணியன், விஜயபாஸ்கர், சம்பத் மற்றும் பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் நிர்வாகிகள் இறங்கி உள்ளனர்.


மேலும், பாராட்டு விழாவில், விவசாயிகளை கவரும் வகையில், பல புதிய அறிவிப்புகளை வெளியிடவும், முதல்வர் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகிறது. அத்துடன், விவசாயிகள், விவசாய கூலி தொழிலாளர்களுக்கு, நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.மேலும்  மறைந்த மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதா காவிரியின் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட செய்தார்கள் அப்


போது தஞ்சையில் காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் பிரமாண்டமான பாரட்டு விழா கூட்டம் நடத்தினர்கள் அதற்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா நடத்துகின்றனர் என்பது குறிப்பிடதக்கது



ஆசிரியர் சேலம்பாரதிராஜா