மும்பை :.
இந்தியாவில் அலகாபாத் ஐகோர்ட்டிற்கு பின்னர் இரண்டாவது பெரிய ஐகோர்ட்டாக மும்பை ஐகோர்ட்உள்ளது. மேலும் இது இந்தியாவின் பொருளாதார வழக்குகளின் மையமாகவும் இருந்து வருகிறது.
மும்பை ஐகோர்ட்டில் தற்போது தலைமை நீதிபதி, 71 நிரந்தர நீதிபதிகள் மற்றும் 23 கூடுதல் நீதிபதிகள் என மொத்தம் 95 நீதிபதிகள் உள்ளனர். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள பிரதீப் நந்த்ராஜாக் இந்த வாரம் ஓய்வு பெற உள்ளார். மேலும் நீதிபதிகள் எஸ்சி தர்மதிகாரி, மற்றும் பி.பி. தர்மதிகாரி , ஆர்.வி.,மோர் உள்ளிட்டவர்கள் விரைவில் ஓய்வு பெற உள்ளனர். இதனையடுத்து நிரந்தர நீதிபதிகளின் எண்ணிக்கை 68 ஆக குறைய உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் கொலிஜியம் அமைப்பு, மாநில ஐகோர்ட்டுகளுக்கான தலைமை நீதிபதிகளை நியமனம் செய்து வருகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொலிஜியத்தின் உத்தரவை பெரும்பாலான நீதிபதிகள் ஏற்க மறுத்து வருகின்றனர்.
மும்பை ஐகோர்ட்டின் இரண்டாவது நிலையில் உள்ள சத்யரஞ்சன் சி தர்மதிகாரி தனிப்பட்ட காரணங்களுக்காக ராஜினாமா செய்துள்ளார். ஒடிசா மாநிலத்திற்கு அவர் மாற்றப்பட பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில் அவர் ராஜினாமா செய்துள்ளதாக கூறப்படுகிறது.முன்னதாக சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி, மேகாலயா மாநில ஐகோர்ட்டுக்கு பணி இடமாற்றம் செய்ய உத்தரவு வந்த போது அதனை ஏற்க மறுத்து பதவியை ராஜினாமா செய்தார்
தற்போதைய நீதிபதிகளே பதவி உயர்வு பெற்று மும்பை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளனரா அல்லது வெளி மாநில ஐகோர்ட்டில் இருந்து ஒருவரை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் உத்தரவிட உள்ளதா என ஐகோர்ட் வட்டாரத்தில் பரபரபப்பாக பேசி வருகின்றனார்.
சக்திபாரதி