யாருக்கு எங்க ஓட்டு? விஜய் 41.68% ரஜினி 19%
ரஜினிகாந்த் - விஜய் அரசியலுக்கு வந்தால் யாரை நீங்க ஆதரிப்பீங்க என்று தமிழ் நாட்டில் பரவலாக மக்களிடம் கருத்து கேட்கப்பட்டது.
விஜய்-க்கு 41.68 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர்.. ரஜினிக்கு 19 சதவீதம் பேர்தான் வாக்களித்துள்ளனர்.. இருவரையும் என்று 2.13 சதவீதம் பேரும், யாரையுமே ஆதரிக்க மாட்டேன் என்று 37.19 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர். இதில் விஜய்யின் ஆதரவு அமோகமாக உள்ளது.. இதற்கு காரணங்கள் பல இருக்கலாம்.. அதேபோல ரஜினிக்கு வாக்கு குறைந்துள்ளது.. ஒருவேளை அவரது நீண்ட இழுபறி அரசியல் வருகை, சர்ச்சை பேட்டிகளும் மக்களை அதிருப்திக்கு உள்ளாக்கி இருக்கலாம்.. ஏப்ரலில் ரஜினி கட்சி ஆரம்பிக்க தயாராகிவிட்ட நிலையில், அரசியல் வருகை பற்றி துளியும் அறிவிக்காத விஜய்க்கு மகத்தான ஆதரவு என்பது வியப்பாகவே உள்ளது. இது அவரது ரசிகர்களின் ஆதரவா? அல்லது மக்களின் ஆதரவா என்பதுதான் தெரியவில்லை.. எனினும், இது ஒரு கணிப்புதான்.. நிஜ நிலவரத்தை நம் மக்களே வழக்கம்போல் முடிவு செய்வர்!