டெல்லி,: டெல்லி,யில், கலவரம் காரணமாக, ஒரு வாரமாக நிலவி வந்த பதற்றம் குறைந்து, மெல்ல மெல்ல இயல்புநிலை திரும்பி வருகிறது. பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்பட்டன. வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள், தற்போது வெளியே வரத் துவங்கியுள்ளனர். பலி எண்ணிக்கை, 42 ஆக அதிகரித்துள்ளது.
டெல்லி,யின் வட கிழக்கு பகுதியில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியவர்களுக்கும், திருத்த சட்டத்தை ஆதரித்தவர்களுக்கும் இடையே, ஒரு வாரத்துக்கு முன், மோதல் ஏற்பட்டது; இது, மெல்ல மெல்ல கலவரமாகமாறியது.இதையடுத்து, கலவரம் நடந்த பகுதிகளில், நேற்று இயல்புநிலை திரும்பத் துவங்கியது. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறக்கப்பட்டன. கலவர பீதி காரணமாக, ஒரு வாரமாக வீடுகளுக்குள் முடங்கி கிடந்த மக்கள், நேற்று வெளியில் தலை காட்டினர்; கடைகளுக்கு வந்து, அத்தியாவசிய பொருட்களை வாங்கினர்.
டெல்லி, சிறப்பு போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரீவத்சவா, கலவரம் நடந்த பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே குழுக்களை அமைத்து, அவர்களுடன் பேச்சு நடத்தி வருகிறார். அவர் கூறுகையில், ''மக்களுக்கு போதிய பாதுகாப்பு அளித்து, அவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துவதே என் முதல் பணி. தேவையற்ற வதந்திகள் பரவுவதை தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; கொடி அணிவகுப்பும் நடத்தப்பட்டு வருகிறது,'''கலவரம் நடந்த பகுதிகளில், தற்போது அமைதி திரும்புகிறது. ' என்றார்.
சக்திபாரதி