சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்தில் பயணிகள் ஏராளமானோர் பயணித்தனர். அப்போது, பாதி தூரத்தில் ஓட்டுநர் திடீரென பேருந்தை நிறுத்தினார். பேருந்தில் இருந்து சத்தம் கேட்பதாகவும், மதுபான வாசனை வருவதாகவும் கூறி உள்ளே சோதனை செய்தனர். அப்போது இரண்டு பேர் அமரக்கூடிய சீட்டில் இருந்த பெண் ஒருவர் மது அருந்திக்கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.
அதுவும் அரைகுறை ஆடையுடன். அவரை பேருந்து ஓட்டுநர் எச்சரித்த நிலையில் மீண்டும் சத்தம் போட்டுக்கொண்டே சென்றதால் அவரை பேருந்தில் இருந்து ஊழியர்கள் கிழே இறங்க கூறினர். இரவு நேரம் என்பதால் தனியாக விடவேண்டாம் என பயணிகள் கூறியதால் அவர் பயணித்தார். எனினும் மதுபோதையில் இருந்த அப்பெண் பாண்டிச்சேரி செல்லும் வரை மது அருந்திக்கொண்டு சத்தம் போட்டப்படியே பயணித்தார். அப்பெண்ணின் ஆடை, செயல், நடவடிக்கையால் பயணிகள் அதிருப்தி அடைந்த நிலையில் பயணிக்க நேரிட்டது