புதிய மருத்துவ கல்லுாரிகளுக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.

சென்னை :ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் மாவட்டங்களில், புதிய அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.தமிழகத்தில், மருத்துவ கல்லுாரி இல்லாத மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகள் துவங்க அனுமதி கோரி, மத்திய அரசிடம், தமிழக அரசு விண்ணப்பித்தது. அதை பரிசீலனை செய்த மத்திய அரசு, புதிதாக ஒன்பது அரசு மருத்துவ கல்லுாரி கள் துவங்க, அனுமதி வழங்கியது.


அதன்படி, ராமநாதபுரம், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், நாகை, திருவள்ளூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகள் துவக்கப்பட உள்ளன.ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நாளை காலை, 10:00 மணிக்கும், விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாலை, 3:00 மணிக்கும், புதிய அரசு மருத்துவகல்லுாரிக்கு அடிக்கல் நாட்டு விழா நடக்கிறது.


அத்துடன், புதிய திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டு விழா, முடிவுற்ற திட்டப்பணிகள் துவக்க விழா, அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் நடக்க உள்ளன. விழாவில், முதல்வர் , முதல்வர் எடப்பாடி பழனிசாமி  நாளை அடிக்கல் நாட்ட உள்ளார்.பங்கேற்று, புதிய மருத்துவ கல்லுாரிக்கும், புதிய திட்டப் பணிகளுக்கும், அடிக்கல் நாட்ட உள்ளார். முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்து, அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.விழாவில், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள்பங்கேற்கின்றனர்


சக்திபாரதி