அனாதை பிணங்களை அடக்கம் செய்து வரும் பெண்

சேலம்,பிப்17


சுடுகாட்டுக்கு வரவே பெண்கள் பயப்படுவார்கள் ஆனால் எந்த பயமும்இல்லாமல் தனி பெண் ஓருவர் ஆண்களுக்கு நிகராக ஆயிரகணக்கில்பிணங்ளை எரித்து வருகிறார் ஆம் சேலம்மாநராட்சிக்குட்பட்ட பகுதியான, அரிசிபாளையத்தைச் சேர்ந்தவர், சீதா,வயது 32; திருமணமாகாதவர். தாயை விட்டு தந்தை மாயமாகி, தாயாரும் இறந்து விட்டதால், பாட்டி ராஜம்மாளுடன் வசித்து வரும் .இவருக்கு சொந்தமாக வீடு இருந்த போதிலும், 24 மணி நேரமும், சேலம், பெரமனுாரில் உள்ள டி.வி.எஸ்., சுடுகாட்டில் வாழ்ந்து வருகிறார்    அங்கு வரும் பிணங்களை அடக்கம் செய்து, வாழ்க்கையை ஓட்டி வரும்இவர் .தன், 12 வயதில் இந்த தொழிலுக்கு வந்தவர்  இதுவரை, 5,000த்துக்கும் மேற்பட்ட அனாதை பிணங்களை, எந்தஓரு பிரதி பலனையும் பெறாமல் அடக்கம் செய்துள்ளார்.


 



 


அது மட்டுமின்றி, உறவினர்கள் மூலம் கொண்டு வரப்படும், பிணங்களையும் அடக்கம் செய்துள்ளார்.பிணங்களை அடக்கம் செய்வதற்காக, உறவினர்கள் கொடுக்கும் தொகையை மட்டும் பெற்றுக் கொள்கிறார். இரவு பகல் என எப்போது அழைத்தாலும் அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், சுடுகாட்டில் ஆஜராகி, பிணத்தை அடக்கம் செய்கிறார். 'பிணங்களை அடக்கம் செய்வது கடவுளுக்கு செய்யும் சேவை' எனக் கூறும் இவரை,


 


அப்பகுதி மக்கள், 'கல்லறை தோட்டத்தின் கன்னியாஸ்திரி' என பாராட்டுகின்றனர்.


தாய்க்கு, என் தந்தை செய்த கொடுமை தான், திருமணத்தை நான் வெறுக்க காரணமாக அமைந்து விட்டது. பிணங்களை அடக்கம் செய்யும் போது, என் மனம் பதறுவது இல்லை. ஆனால், திருமணம் செய்து, ஒரு மாதத்துக்குள் தற்கொலை செய்த பெண்களின் உடல்களை பார்க்கும் போது, மனம் பதைக்கிறது, என கூறினார்


சக்திபாரதி