மத்திய பிரதேசத்தில் சிறுமியை அவரது குடும்பத்தினர் கடுமையாக அடித்து உதைத்து ஜடையை வெட்டிய கொடுமை நடந்துள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் அலிராஜ்பூர் மாவட்டம், சாண்ட்வா பகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமி, தனக்கு அறிமுகமான ஒரு சிறுவனுடன் போனில் அடிக்கடி பேசுவதாக பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்த சிறுமியிடம் கூறி கண்டித்துள்ளனர். சமீபத்தில் இந்த விவகாரம் மீண்டும் கிளம்பி உள்ளது.
அப்போது சிறுமியை குடும்பத்தினர் கடுமையாக அடித்து உதைத்துள்ளனர். பின்னர் பொது இடத்தில் வைத்து, அவளது ஜடையை வெட்டி அவமானப்படுத்தி உள்ளனர். இந்த கொடுமை குறித்த தகவல் தெரியவந்ததும், இதுதொடர்பாக அவளது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பேரை கைது செய்திருப்பதாக காவல்துறை அதிகாரி தீரஜ் பாபர் கூறியுள்ளார்.
சக்திபாரதி