சென்னை: தமிழகத்தில் வரும் 2021ஆண்டு நடைபெறயுள்ள தமிழக சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடனான கூட்டணியை தொடர்வதா? இல்லை துண்டித்து கொள்வதா? என, முடிவெடுக்க முடியாமல், அ.தி.மு.க. திணறி வருகின்றது
தமிழகத்தில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., இடம் பெற்றுள்ளது. ஆனால், இரு கட்சிகளுக்கும் இடையே, கருத்து வேறுபாடுகள் தற் போதுஅதிகரித்தபடி உள்ளன. 'ஊரக உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., அறிவித்தபடி இடங்களை வழங்கவில்லை. மாவட்ட நிர்வாகிகள் மதிக்கவில்லை' என, பா.ஜ.,வினர் ஒரு பக்கம் குற்றம் சாட்டி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, பா.ஜ., முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசை விமர்சிக்க, பதிலுக்கு அவரை, அமைச்சர் ஜெயகுமார் வறுத்தெடுத்தார். இது, இரு கட்சியினருக்கும் இடையே, அதிக விரிசலை ஏற்ப்படுத்தி உள்ளது.
இதுகுறித்து, பா.ஜ., நிர்வாகி கூறியதாவது:ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள, அ.தி.மு.க.,வை, நாம் ஏன் காப்பாற்ற வேண்டும்; அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய, இரு கட்சிகளும், ஊழலில் திளைப்பவை. இரு கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் வரை, தமிழகத்தில், கட்சியை வளர்க்க முடியாது.ரஜினி கட்சி துவக்கினால், அவருடன் கூட்டணி அமைப்போம் அல்லது, தி.மு.க., - அ.தி.மு.க., அல்லாத கட்சிகளுடன், கூட்டணி அமைப்போம். அதற்கு முன்னோட்டமாக, அரசின் செயல்பாடுகளை விமர்சிப்போம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
ஆனால், பா.ஜ., டெல்லி தலைமையோ, 'அ.தி.மு.க.,வை கழற்றி விட்டால், தி.மு.க., எளிதாக வெற்றி பெற்று விடும். நடிகர் ரஜினி, கட்சி ஆரம்பிப்பாரா; ஆரம்பித்தால், நம்முடன் கூட்டணி அமைப்பாரா என்பது சந்தேகம். எனவே, அமைதியாக இருங்கள்' என, கூறியுள்ளது.அதேபோல, பா.ஜ., கூட்டணிக்கு, அ.தி.மு.க.,விலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. 'பா.ஜ., உடன் கூட்டணி அமைப்பதால், சிறுபான்மையினர் ஓட்டுகளை இழக்க வேண்டியுள்ளது. தமிழகத்தில், பா.ஜ., மீதான வெறுப்புணர்ச்சி அதிகமாக உள்ளது. எனவே, பா.ஜ.,வை ஏன் சுமக்க வேண்டும்' என, அ.தி.மு.க., நிர்வாகிகள் கேட்க துவங்கி உள்ளனர்.எதிர்ப்புசமீபத்தில், முதல்வர், துணை முதல்வர் ஆகியோர், அமைச்சர்களை தனித்தனியே சந்தித்து பேசினர். அப்போது, பல அமைச்சர்கள், 'பா.ஜ.,வின் அனைத்து செயல்பாடு களையும், ஆதரிக்க வேண்டாம். மக்களிடம் எதிர்ப்பு அதிகமாக உள்ள விஷயங்களை, நாமும் எதிர்ப்போம்' என, கூறியுள்ளனர். அதை கேட்ட முதல்வரும், துணை முதல்வரும் தற்போது 'பல விஷயங்களில், பா.ஜ., உதவி தேவைப்படுகிறது. எனவே, விரைவில் நல்ல முடிவெடுப்போம்' என, கூறியுள்ளனர்.
தற்போதைய சூழலில், இரு கட்சிகளும், கூட்டணியில் தொடர் வதாக வெளியில் காட்டிவந்தாலும், பட்டும் படாமல் உள்ளன. சூழ்நிலைக்கேற்ப கூட்டணி குறித்து முடிவெடுக்க தீர்மானித்துள்ளதாகஅரசியல்வட்டரா தகவல் ெதாிவிக்கின்றன
ஆசிரியர் சேலம்பாரதிராஜா