ஆர்பிஐயின் நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்பு.. யெஸ் வங்கியில் ரூ.265 கோடியை எடுத்த நிறுவனம்..

ஆர்பிஐயின் நடவடிக்கைக்கு ஒரு நாள் முன்பு.. யெஸ் வங்கியில் ரூ.265 கோடியை எடுத்த நிறுவனம்..



யெஸ் பேங்கில் நடந்து வரும் குழப்பமான நிலைகளுக்கு மத்தியில், ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு முன்பு, அதுவும் ஒரே ஒரு நாள் முன்பு ஒரு நிறுவனம், 265 கோடி ரூபாய் பணத்தினை எடுத்துள்ளது. வதோரா நகராட்சியின் கீழ் செயல்படுத்தப்படும் சிறப்பு தேவைக்காக வாகனங்கள் தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வரும், வதோரா ஸ்மார்ட் சிட்டி டெவலப்மென்ட் நிறுவனம் தான் யெஸ் பேங்கில் இருந்து இவ்வளவு பெரிய தொகையை எடுத்துள்ளது.


ஏற்கனவே பல குழப்பமான சூழ்நிலைக்களுக்கும் நிதி நெருக்கடியின் மத்தியில் சிக்கித் தவித்து வரும் யெஸ் பேங்கினை, ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது.  இந்த நிலையில் தான் வாடிக்கையாளார்கள் 50,000 ரூபாய் பணம் மட்டுமே எடுக்க முடியும் என்ற அதிரடியான நடிவடிக்கையினையும் எடுத்துள்ளது. இதனால் ஏற்கனவே மக்கள் குழப்பத்தில் உள்ளனர். இந்த நிலையில் அது எப்படி ஆர்பிஐயின் நடவடிக்கைக்கு முன்பு, அதுவும் சரியாக ஒரு நாள் முன்பு இவ்வளவு பெரிய தொகையினை எடுத்துள்ளது என்ற கேள்வி பலரின் மத்தியில் எழுந்துள்ளது. இது அரசின் பணம் ஆனால் இதற்கு சரியான பதில் அளிக்கும் விதமாக, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மத்திய அரசு செலுத்திய தொகை தான் அது. பாங்க் ஆப் பரோடா வங்கியில் தொடங்கப்பட்ட புதிய வங்கிக் கணக்குக்கு மாற்றப்பட்டதாகவும். Vadodara Smart City Development Company நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுதிர் படேல் தெரிவித்துள்ளார். மேலும் யெஸ் பேங்கில் உள்ள பிரச்சனைகளை கருத்தில் கொள்டு, அது இரண்டு நாட்களுக்கு முன்பு தான் திரும்ப பெறப்பட்டதாக்வும் விளக்கமளித்துள்ளார். நம்பிக்கையை அதிகரிக்கும் ஒரு முயற்சி நிதி நெருக்கடியில் தத்தளித்து வரும் யெஸ் பேங்கினை தான் தற்போது ஆர்பிஐ தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. வங்கி மறுசீரமைப்பு அல்லது இணைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை காப்பாற்றுவதற்காக இந்த நடவடிக்கையினை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.   அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி நிர்வாகத்தில் நிதி மோசடி நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்த வங்கியை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது ரிசர்வ் வங்கி. இந்த நிலையில் தற்போது அதிகளவிலான வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் யெஸ் பேங்கினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது வாடிக்கையாளார்கள் மத்தியில் நம்பிக்கையை உருவாக்கும் என்றும் கூறப்படுகிறது. இனி இவர் தான் நிர்வாகிப்பார் தற்போது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் யெஸ் பேங்கினை எஸ்பிஐயின் முன்னாள் துணை நிர்வாக இயக்குனர் பிரசாந்த் குமார் தலைமையின் கீழ் அடுத்த 30 நாட்களுக்கு யெஸ் பேங்க் நிர்வாகம் செயல்படும் என ஆர்பிஐ அறிவித்துள்ளது. இந்த நிலையில் எஸ்பிஐயும் எல்ஐசியும் கூட்டாக இணைந்து யெஸ் பேங்கின் பங்குகளை வாங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

thanks onetamil india