தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை ! யெஸ் பேங்க் குளறுபடியா ?
SHYAM NEWS
09.03.2020
தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை ! யெஸ் பேங்க் குளறுபடியா ?
09.03.2020
தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை ! யெஸ் பேங்க் குளறுபடியா ?
தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்களுக்கு பிப்ரவரி மத சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது .மாதத்தின் கடைசி வேலைநாளில் வழங்கவேண்டிய மாத சம்பளம் இன்றுவரை வழங்கப்படவில்லை .தூத்துக்குடி மாநகராட்சி வரிவசூல் பணம் யெஸ் பேங்க்கில் செலுத்தப்பட்டு வந்ததாக தெரிகிறது .கடந்த வாரம் யெஸ் பேங்கில் பெரும் குளறுபடி நடந்ததை ஒட்டி இந்திய ரிசெர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது .இதனால் யெஸ் பாங்கில் போட்டபணத்தை எடுக்கமுடியால் பொதுமக்கள் திணறினர் இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சி தூத்துக்குடி யெஸ் பேங்கில் செலுத்திய பணத்தை எடுக்கமுடியால், ஊழியர்களுக்கு சம்பளம் பட்டுவாடா செய்யமுடியாமல் திணறுவதாக ஊழியர்கள் தெரிவித்தனர் .இது சம்பந்தமாக ஆட்சியரிடம் கேட்டபோது இதுகுறித்து விராசரனை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார் .தூத்துகுடியில் அரசு வங்கிகள் பல இருந்தும் தனியார் வங்கியை தேர்ந்து எடுத்து மாநகராட்சி பணத்தை டெபாசிட் செய்தது ஏன் என்ற கேள்வி ஊழியர்கள் மட்டும் அல்ல பொதுமக்களும் கேட்கின்றனர் .