வீட்டின் பூட்டை உடைத்து 5 பவுன் நகை திருட்டு : மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
கயத்தாறு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகையைத் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீசார் தேடி வருகின்றனா்.

 

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறை அடுத்த வடக்கு இலந்தைகுளம் மடத்து தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டியன் மனைவி ராமாத்தாள்(55). இவா், சுரண்டையில் உள்ள மகன் வீட்டிற்கு சென்றுவிட்டு வெகுநாள்களுக்குப் பின், நேற்று முன்தினம் வீட்டிற்கு திரும்பிவந்தாா். அப்போது, கதவில் பூட்டு, வீட்டினுள் பீரோ உடைக்கப்பட்டிருந்தனவாம். மேலும், பீரோவிலிருந்த 5 பவுன் தங்க நகைகள் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், கயத்தாறு போலீசார் நேற்று வழக்குப் பதிந்து, மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.