திருமண ஆசைகாட்டி இளம்பெண் பாலியல் பலாத்காரம் : காதலனுக்கு போலீஸ் வலைவீச்சு
திருச்செந்தூரில் திருமண ஆசைகாட்டி இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த காதலனை போலீசார் தேடி வருகின்றனர். 

 

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் விஜயநாராயணபுரத்தைச் சேர்ந்தவர் பரிபூரண நாதன் மகன் பீட்டர் (20), இவர் தனது உறவினரின் மகளை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். மேலும் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த பெண்ணை திருணம் செய்ய மறுத்துவிட்டாராம். இதுகுறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பிரேமா வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.