கடந்த ஆண்டு வூஹானில் நடந்த சர்வதேச ராணுவ வீரர்களுக்கான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்த, அமெரிக்க ராணுவ வீரர்கள்தான், சீனாவில் கொரோனா வைரசை பரப்பினர்' என, சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சாவோ லிஜியன் தெரிவித்தார். சீனாவின் இந்தக் குற்றச்சாட்டால் உலக அளவில் பெரும் சர்ச்சை வெடித்தது.சீனாவின் இந்தக் குற்றச்சாட்டிற்கு மறுப்புத் தெரிவித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், கொரோனா வைரசை, 'சீன வைரஸ்' எனக் குறிப்பிட்டார். அதன்பின், அமெரிக்காவில் பணியாற்றி வந்த, சீனப் பத்திரிகையாளர்கள், 60 பேரை வெளியேற்றியது ட்ரம்ப் அரசு.இதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில், அமெரிக்கப் பத்திரிகைகளான, 'நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல், வாஷிங்டன் போஸ்ட்' ஆகிய நிறுவனங்களைச் சேர்ந்த, சீனாவில் பணியாற்றும், 13 செய்தியாளர்கள், சீனாவிலிருந்து உடனடியாக வெளியேற உத்தரவிட்டுள்ளது.இந்த நடவடிக்கைக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, பல்வேறு தகவல்களை சீன அரசு மறைத்ததை வெளியிட்ட சீனா பத்திரிகையாளர்கள்பலர் மாயமாக்கப்பட்டனர். இந்நிலையில், அமெரிக்கப் பத்திரிகையாளர்கள்அந்த உண்மையை வெளியிட்டதால்தான், சீனா இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக, பலரும் கருத்து தெரிவிக்கின்றனர்.
சக்திபாரதி