எடப்பாடியாரின் சிபாரிசு கடிதம் நிராகரிப்பு... திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிரடி !

எடப்பாடியாரின் சிபாரிசு கடிதம் நிராகரிப்பு... திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிரடி !



எடப்பாடியாரின் சிபாரிசு கடிதம் நிராகரிப்பு... திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிரடி  சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சிபாரிசு கடித்தத்தை குப்பையில் தூக்கி எறியாத குறையாக திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிகாரிகள் நடந்துகொண்ட விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மத்திய தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தர்ராஜன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சென்றிருந்தார். அவ்வாறு அங்கு செல்லும் போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பரிந்துரை கடிதத்தை பெற்று சென்ற சுந்தர்ராஜன் அதனை திருப்பதி தேவஸ்தானம் போர்டு அதிகாரிகளை சந்தித்து கொடுத்துள்ளார். அதை வாங்கி படித்துக்கூட பார்க்காத அவர்கள், வெளிமாநில சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படுவதில்லை என பொட்டில் அடித்தது போல் கூறிவிட்டனர்.