டெல்லி
சீனாவின் யுகானிலிருந்து அழைத்து வரப்பட்டு டெல்லியில் சிகிச்சை பெற்ற 112 பேருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை. 36 வெளிநாட்டினர் உள்பட 112 பேருக்கும் டெல்லியின் சாவ்லாவில் உள்ள தடுப்பு முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
கொரோனா வைரஸ் தாக்குதலுக்கான தயார்நிலை இல்லை. இதனை உணராமல் இந்திய அரசு தூங்குகிறது. கொரோனா இந்தியாவில் பரவி வருகிறது. இது பேரழிவை ஏற்படுத்தும். நமது பிரதமர் தூங்கிக்கொண்டே வாகனம் ஓட்டுகிறார். துரதிர்ஷ்டவசமாக அவர் பிரச்சினையை புரிந்து கொள்ளவில்லை.
பிரதமருக்கும், மத்திய அரசுக்கும் பொருளாதாரம் பற்றியும், அது எப்படி வேலை செய்யும் என்பது பற்றியும் எந்த புரிதலும் இல்லை. ஏற்கனவே பங்கு சந்தையில் சூழ்நிலை மாறிவிட்டது. இந்த தேசமும், நாமும் நெடுஞ்சாலையில் ஒரு விபத்தை எதிர்நோக்கி உள்ளோம்.
அவர் டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
மக்களுக்கும், நாட்டுப்பொருளாதாரத்துக்கும் கொரோனா மிகப் பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. அரசு இதை தீவிரமாக எடுத்துக்கொள்ள மறுக்கிறது. பிரச்சினையைத் தவிர்ப்பது தீர்வு கிடையாது. இல்லையெனில் இந்திய பொருளாதாரம் அழியும் என்று கூறி உள்ளார்
சக்திபாரதி