தூத்துக்குடி ஏரலை சேர்ந்த போலி பெண் மருத்துவர் கைது!

 


ஏரலை சேர்ந்த போலி பெண் மருத்துவர் கைது!


 

திருவாடானை அருகே தொண்டியில் பத்தாம் வகுப்பு படித்து மருத்துவம் பார்த்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த போலி பெண் டாக்டர் கைது செய்யப்பட்டார்.

 

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா தொண்டியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிதாக கிளினிக் துவங்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. இதில்   தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் மருத்துவராக இருந்தார். இவருடைய கிளினிக்கில் சிகிச்சை பெற்ற தொண்டியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் இறந்து விட்டார். இது குறித்து அவரது மகன் முருகேசன் தொண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும் இந்த போலி டாக்டர்கள் மீது மேலும் பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. 

 

இதனையடுத்து போலி மருத்துவர் ராஜலட்சுமி தலைமறைவானார். இந்நிலையில் நேற்று கிளினிக்கில் இருந்து பொருள்களை எடுக்க வந்தபோது போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர் இவர் பத்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளார் என்றும் மேலும் பியூட்டிசியன் படித்துள்ளார் இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது என்றும் தற்போது வேறு ஒரு நபருடன் வசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இவரது சான்றிதழை ஆய்வு செய்த போலீசார் இவரது சான்றிதழ் போலி என தெரிய வந்துள்ளது.  

 

அவர் வைத்திருந்த அந்த சான்றிதழ் ஏற்கனவே 1987ம் ஆண்டு சென்னை மருத்துவ கல்வி பயின்று தற்போது ஹைதராபாத்தில் மருத்துவராக இருப்பவருடையது  என்பதும் தெரிய வந்துள்ளது. அந்த மருத்துவமனையில் சோதனையிட்ட போலீசார் மருந்துகள் மாத்திரைகள் ஊசி மற்றும் மடுத்துவ பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றினர். இது தொடர்பாக போலி டாக்டர் ராஜலட்சுமி அவரது நண்பர்கள் சுரேந்தர் இருவரையும் தொண்டி போலீசார் கைது செய்தனர். மேலும் பலர் இதில் சிக்குவார்கள் என தெரிய வருகிறது.