திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி

திமுக பொருளாளர் பதவியிலிருந்து துரைமுருகன் விலகல்... பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டி

சென்னை: திமுக பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதால் பொருளாளர் பதவியிலிருந்து விலகுவதாக துரைமுருகன் அளித்த கடிதத்தை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக்கொண்டார். இதனால் மார்ச் 29-ம் தேதி அன்று நடைபெறும் திமுக பொதுக்குழுவில் புதிய பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளர் தேர்வு நடைபெறும் என ஸ்டாலின் அறிவித்துள்ளார். புதிய பொதுச்செயலாளராக துரைமுருகனும், புதிய பொருளாளராக எ.வ.வேலு அல்லது டி.ஆர்.பாலு ஆகியோர்களில் யாரேனும் ஒருவர் தேர்வாக மிக அதிக வாய்ப்புகள் உள்ளன.