டெல்லி,
நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் இன்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, டெல்லி வன்முறை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ளிட்டவை குறித்து இருவரும் ஆலோசித்ததாக தெரிகிறது.
இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; - டெல்லி வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும் பிரதமரிடம் ஆலோசித்தேன்.
டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை இரவு வதந்தி பரவியதும் நிலமையை கட்டுப்படுத்த போலீசார் துரிதமாக செயல்பட்டது. பாராட்டத்தக்கது என்றார் அரவிந்த் கெஜ்ரிவால்
சக்திபாரதி