பொது மக்களுக்கு இடையூறு,பேனர்களை தவிருங்கள்; தொண்டர்களுக்கு முதல்வர், பழனிசாமி, பன்னீர்செல்வம், கடிதம்

சென்னை: 'பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்களில் கட் - அவுட்டுகள் மற்றும் பேனர்கள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்' என அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு கட்சி தலைமை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி ஆகியோர் கட்சி நிர்வாகிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம்:அ.தி.மு.க. நிகழ்ச்சிகளுக்கோ கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளுக்கோ வரவேற்பு என்ற பெயரிலும் விளம்பரம் என்ற பெயரிலும் மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைப்பதை தவிர்க்க வேண்டும் என ஏற்கனவே வலியுறுத்தி உள்ளோம்.


இது தொடர்பான நீதிமன்ற அறிவுறுத்தலை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும். எனவே கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் ஈடுபடக் கூடாது. எந்த சூழ்நிலையிலும் எந்த காரணத்திற்காகவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் கட் - அவுட்டுகள் பிளக்ஸ் போர்டுகள் வைப்பதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். இவ்வாறு தொண்டர்களுக்கு முதல்வர், பழனிசாமி, பன்னீர்செல்வம், கடிதத்தில் கூறியுள்ளனர்.


சக்திபாரதி