மனைவியுடன் குடும்பத் தகராறு: வாலிபர் தற்கொலை
சேரகுளம் அருகே மனைவியுடன் ஏற்பட்ட குடும்பத் தகராறில் கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டானர்.
தூத்துக்குடி மாவட்டம், கருங்குளம் வட்டம், சேரகுளம் அருகேயுள்ள சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து மகன் வெள்ளத்துரை (32). இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. வெள்ளத்துரை அங்குள்ள ஓட்டலில் சர்வராக வேலைபார்த்து வந்தார். போதிய வருமானம் இல்லாததால் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் மனவேதனையடைந்த வெள்ளத்துரை நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து சேரகுளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.