சட்டமன்றம் நடந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும்- முதல்வர் பழனிசாமி பேச்சு

சென்னை


 


தமிழக சட்டப்பேரவையில்  எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின்  பேசும் போது கேரளாவை போன்று, ரேஷன் பொருட்களை வீட்டிற்கே நேரில் சென்று வழங்க வேண்டும்.  ஏப்ரல் 9ஆம் தேதி வரை நடைபெற இருந்த சட்டப்பேரவை, முன்கூட்டியே முடிக்கப்படுகிறதா? எல்லோரையும் தனிமைப்படுத்த சொல்லி விட்டு, நாம் கூட்டமாக அமர்ந்து பேசலாமா? அமைச்சர் ஒருவர் தனது வீட்டின் முன்பு யாரும் வரவேண்டாம் என பலகை வைத்துள்ளார். அமைச்சருக்கே கொரோனா அச்சம் உள்ள போது, நாம் ஒன்று கூடி விவாதிப்பது சரியா? என  கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதிர்க்கட்சி தலைவர்கள் பேரவையை ஒத்திவைக்க வலியுறுத்துகின்றனர். சட்டமன்றம் கூடினால் தான் நிலைமையை மக்களுக்கு தெளிவுபடுத்த முடியும். இங்குதான் மக்கள் பிரச்சினைபற்றி பேச முடியும். சட்டமன்றத்தில் கூடியிருந்தால் நோய்த்தொற்று ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சட்டமன்றம் நடந்துகொண்டு இருந்தால்தான், மக்களின் அச்ச உணர்வை போக்க முடியும்.  என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.


 


சட்டப்பேரவையை ஒத்திவைக்கக் கோருவது பீதியை ஏற்படுத்த அல்ல; இந்த நேரத்தில் எம்.எல்.ஏ.க்கள் தொகுதியில் இருக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே  என மு.க. ஸ்டாலின் கூறினார்.



சக்திபாரதி