மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று இனி ரேஷன் கார்டில், தமிழ் மட்டுமின்றி, ஆங்கிலத்திலும் விபரங்கள்

ஆங்கிலத்திலும் விபரங்களை அச்சிட, தமிழக உணவுத் துறை முடிவு செய்துள்ளது.


ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க, மத்திய அரசின், 'ஆதார்' எண் அவசியம். வரும், ஜூன் முதல், நாடு முழுவதும், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டம் செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், ரேஷன் கார்டுதாரர்கள், எந்த மாநிலத்திலும், ரேஷன் பொருட்களை வாங்கலாம். இதற்காக, ரேஷன் கார்டின் வடிவங்களில் மாற்றம் செய்யப்படலாம் என, தகவல் வெளியானது.


ஆனால், 'தமிழக ரேஷன் கார்டுகளில், மாறுதல் செய்யப்படாது' என, உணவுத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ரேஷன் கார்டில், இரு மொழியில் விபரங்களை தெரிவிக்குமாறு, அனைத்து மாநிலங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.


இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கார்டுகளில், தமிழில் மட்டுமே, குடும்ப தலைவர் பெயர், உறுப்பினர்கள் பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்கள் அச்சென்னை: மத்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று, ரேஷன் கார்டில், தமிழ் மட்டுமின்றி, சிடப்பட்டு தரப்படுகின்றன. ரேஷன் கார்டில் உள்ள விபரங்களை, இரு மொழிகளில் அச்சிட்டு வழங்குமாறு, மத்திய அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.


இதனால், தமிழக ரேஷன் கார்டுகளில், தமிழ், ஆங்கிலத்தில் விபரங்கள் அச்சிடப்படும் என, பதில் கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. இதுவும், ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம் அமலுக்கு வந்த பின், செயல்படுத்தப்படும். இவ்வாறு, அவர் கூறினார்



சக்திபாரதி