'பத்திரிகையாளர் தாக்குதல் தொடர்பாக, அமைச்சர், ராஜேந்திரபாலாஜி மீது, நடவடிக்கை எடுக்க ஸ்டாலின் வலியுறுதல்

சென்னை: 'பத்திரிகையாளர் தாக்கப்பட்டது தொடர்பாக, அமைச்சர், ராஜேந்திரபாலாஜி மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் பேச்சுகளும், செயல்பாடுகளும், தமிழகத்தில், கலவரங்களை துாண்டும் வகையில் அமைந்துள்ளன. அதன் கொடூர அடையாளமாக, அமைச்சருக்கும், எம்.எல்.ஏ.,க்கும் நடக்கும் மோதல் குறித்த செய்தி வெளியிட்ட, பத்திரிகையாளர், கார்த்தி, சிவகாசியில் கடுமையாக தாக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.அமைச்சர், ராஜேந்திரபாலாஜியின், சொற்கள் பலவும் நச்சுத்தன்மை மிக்கவை. 'அடிப்பேன், உதைப்பேன், நாக்கை அறுப்பேன், துாக்கிப்போட்டு மிதிப்பேன்' என, கொக்கரிக்கும் ராஜேந்திரபாலாஜி மீது நடவடிக்கை எடுக்காமல், கவர்னர் அமைதி காப்பது ஏன்?இதுபோன்று செயல்படும் அமைச்சர் மீது, முதல்வர் இ.பி.எஸ்., கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.



சக்திபாரதி