மேலும் 25 பேருக்கு கொரோனா; பலி 15 ஆக அதிகரிப்பு!


கொரோனாவை தடுப்பதற்கான அனைத்து மருத்துவ உபகரணங்களும் தமிழகத்தில் போதிய அளவு உள்ளன. தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர்களின் எண்ணிக்கை 180 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் 1267 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.



மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு துரிதப்படுத்தியது. அரசு எடுத்த நடவடிக்கையால் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கொரோனா தொற்றை தடுப்பதுதான் மிகவும் முக்கியம் என்று முதல்வர் கூறினார்.